ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் தீயில் கருகி பலியாகினர்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் தீயில் கருகி பலியாகினர். நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 3 பேர், பெற்றோர் என ஐந்து பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அஜய் குப்தா (35), அவரது மனைவி அனிதா குப்தா (34), மகன்கள் திவ்யான்ஷ் (9), தக்ஷ் (3) மற்றும் மகள் திவ்யான்ஷி (6) என அடையாளம் காணப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags : 5 members of the same family were burnt alive in a fire in Bareilly