கொரோனா பயத்தால்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேர் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 03-06-2021 07:02:17pm
கொரோனா பயத்தால்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேர் தூக்கிட்டு தற்கொலை


 

சென்னை அருகே உள்ள ஆவடியில் கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர் . 
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு ரோடு பகுதியில் டில்லி (74), அவரது மனைவி மல்லிகேஸ்வரி (64), மகள் நாகேஸ்வரி (34) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் மேல் தளத்தில் வசித்து வந்த நிலையில் மல்லிகேஸ்வரியின் அண்ணன் வெங்கட்ராமன் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் டில்லி, மல்லிகேஸ்வரி, நாகேஸ்வரி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். மருந்தகத்தில் மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் குணமாகாத நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மூன்று பேரும் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தற்கொலை செய்துகொண்ட மல்லிகேஸ்வரியின் அண்ணன் வெங்கட்ராமன் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற திருமுல்லைவாயில் காவல் நிலைய போலீசார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலைச் செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via