பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

by Staff / 01-12-2023 04:36:47pm
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பொன்னுக்குடி பகுதியை சோ்ந்தவா் காா்த்தி (22). வெல்டிங் தொழிலாளி. அதே பகுதியை சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 23. 03. 2022 அன்று காா்த்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.இதுகுறித்து வழக்குப் பதிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் காா்த்தியை கைது செய்தனா்.இந்த வழக்கு நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் குற்றம்சாட்டப்பட்ட காா்த்திக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.மேலும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். இதையடுத்து காா்த்தி கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

Tags :

Share via

More stories

Logo