பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34, 087 பேருந்துகளைஅரசு இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ் .சிவசங்கர் அறிவித்தார்.

by Admin / 07-01-2026 12:25:35am
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34, 087 பேருந்துகளைஅரசு இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ் .சிவசங்கர் அறிவித்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34, 087 பேருந்துகளை பொது மக்கள் தங்கு தடையற்ற பயணம் மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு அரசு இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ் .சிவசங்கர் அறிவித்தார். ஜனவரி 9 2026 முதல் ஜனவரி 14 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் வழக்கமாக இயங்கும் 1252 பேருந்துகளுடன் கூடுதலாக 10245 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2297 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிற முக்கிய ஊர்களுக்கு 11,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்ப 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழக முழுவதும் மொத்தம் 25 ஆயிரத்து எட்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வேலூர் பெங்களூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் இயங்கும் என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி மதுரை தூத்துக்குடி நெல்லை கும்பகோணம் சேலம் போன்ற ஊர்களுக்கும் மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இணையதளம் வழியாக அல்லது டி என் எஸ் டி சி செயலி வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து சம்பந்தமாக ஏதாவது புகார் அளிக்க பயணிகள் விரும்பினால் 9445014450,9445014436, 24 மணி நேரமும் இயங்கும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 34, 087 பேருந்துகளைஅரசு இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ் .சிவசங்கர் அறிவித்தார்.
 
Tags :

Share via