இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு வாட்ச் விவரங்கள்
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பிராண்டு ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதுபற்றிய விவரங்கள் ஒன்பிளஸ் வலைதளத்திலேயே இடம்பெற்று இருந்ததாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். நார்டு ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களோ, அதன் அம்சங்களோ இடம்பெறவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மட்டும் தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் நார்டு பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆகும். இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது உருவாகி இருக்கும் நார்டு பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவனத்தின் நார்டு சீரிஸ் சாதனங்கள் பட்டியலை குறைந்த விலை ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரியில் இருந்து ஸ்மார்ட்வாட்ச் வரை நீட்டித்து இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பட்ஸ் மாடலை உருவாக்கி இருப்பதாகவும், இது ஏப்ரல் 28 ஆம் தேதி ஒன்பிளஸ் 10R மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் விலை ரூ. 5 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 8 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு வாட்ச் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்லீப் டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷன், மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்
Tags :