சீட் வாங்கி தருவதாக கூறி யாராவது அணுகினால்,அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் -அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் சீட் வாங்கி தருவதாக கூறி யாராவது அணுகினால்,அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கட்சி தொண்டர் களுக்கும்நிர்வாகிகளுக்கும் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். வேட்பாளர் தேர்வு தகுதி மற்றும் வெற்றி வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு தலைமை கழகத்தால் நேரடியாக தீர்மானிக்கப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தி உள்ளதோடு கட்சி பொறுப்பில் இருப்பவர்களோ அல்லது வெளி நபரோ பணம் பெற்றுக் கொண்டு சீட் வாங்கி தருவதாக கூறினால், அது குறித்து தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
Tags :



















