உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

by Admin / 08-01-2026 01:26:52am
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

டெல்லியில் நேற்று இரவு 9:45 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகளும் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அன்றே இரவு இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை தமிழக ஆளுநர் ரவியிடம் வழங்கியதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் வழங்கியதாக சொல்லப்படுகின்றது. அத்துடன், அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ,டி.டி.வி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்தும் அமித் ஷாவிடம் ஆலோசித்ததாக தெரிகிறது..

 

 

Tags :

Share via
Logo