கடலில் மூழ்கிய விசைப்படகு..

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி வளன் என்பருக்குச் சொந்தமான விசைப்படகு பாம்பன் கடல் பகுதியில் மூழ்கி விபத்தில் சிக்கியுள்ளது. படகில் இருந்த 6 மீனவர்களும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில், படகை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :