திருப்பூர்- சேலம் அணிகள் இன்று மோதல்

by Editor / 13-06-2025 02:38:06pm
திருப்பூர்- சேலம் அணிகள் இன்று மோதல்

TNPL 2ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் சேலம் மாவட்டத்தில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. வருகிற 19ஆம் தேதி வரை சேலத்தில் 9 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று இரவு 7:15 மணிக்கு நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன.

 

Tags :

Share via