2027- ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி 2027 அக்டோபர் முதல் நவம்பர் 21 வரை.

by Admin / 13-08-2026 02:11:30am
2027- ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி 2027 அக்டோபர்  முதல் நவம்பர் 21 வரை.

உலகக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் ஆண்கள் போட்டி 2027 அக்டோபர் நாள் முதல் நவம்பர் 21 வரை நடைபெற உள்ளது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ,நமீபியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இந்த போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன ஐசிசி ஒருநாள் தரவரிசையின் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ,இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நேரடி தகுதி பெற்றுள்ளன, மேற்கிந்திய தீவுகள் அணி, அயர்லாந்து அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு இழந்து உள்ளதால் ,பிப்ரவரி 2027 நடைபெறும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடி உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள முடியும், பங்கேற்கும் 14 அணிகளில் தலா 7 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதை தொடர்ந்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

 

Tags :

Share via
Logo