கள்ளுக்கு எதிராக கிருஷ்ணசாமி கருத்து: கொந்தளிக்கும் விவசாயிகள்

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஊடகப்பிரிவு செயலர் ஈஸ்வரன் கூறுகையில், "புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, 'கள்' ஆபத்தானது என்பதால் பயன்பாட்டுக்கு வந்தால், கள்ளச்சாராயம் அதிகரிக்கும் என சொன்னார். இது முழுக்க தவறான தகவல். கள் குடித்து ஒருவர் உயிரிழந்தார் என்ற வரலாறு கிடையாது. தென்னை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டிய சூழலில், விவசாயிகள் உள்ளனர். கள் குறித்த கருத்தை கிருஷ்ணசாமி திரும்ப பெறவில்லையெனில் ஜூன். 20இல் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்" என்றார்.
Tags :