அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 5 ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி தாண்டவம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சி.3 ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள 4 கால் பன்னீர் மண்டபத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாநகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வெட்டிவேர் பல்லக்கில் அமர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் பன்னீர் மண்டபத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம், குறிப்பாக சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் கடந்த 30 ஆம் தேதி மாலை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்ததுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து கடந்த4 நாட்களாக சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில் 5வது நாளான இன்று அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண வண்ண பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி 3 ஆம் பிரகாரத்தில் உள்ள 4 கால் பன்னீர் மண்டபத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது, அதனை தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
Tags : அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 5 ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது....