திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு தொடக்கம்!

by Editor / 21-01-2024 11:50:21am
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு தொடக்கம்!

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு இன்று தொடங்கியது. சேலம் பெத்தநாயக்கன்பாளைத்தில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கொடியேற்றி வைத்த நிலையில், லட்சக்கணக்கில் திரண்டுள்ள தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். மாநாட்டையொட்டி, சேலத்தில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டில் தொண்டர்களுக்கு இன்று மதியம் மட்டன் பிரியாணி வழங்கப்படவுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

 

Tags : திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு தொடக்கம்!

Share via

More stories

Logo