சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு  21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் முதல் வேலை நிறுத்தம்; 

by Editor / 01-08-2023 09:27:59am
சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு  21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் முதல் வேலை நிறுத்தம்; 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த  பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று  பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்தனர். இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.  
 சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300 மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo