செந்தில் பாலாஜிக்கு சிறையில் வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி!

by Editor / 18-07-2023 10:11:08pm
செந்தில் பாலாஜிக்கு சிறையில் வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் நெஞ்சு வலியால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை தேறியதால் புழல் சிறையில் கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் வகுப்பு கைதிகளுக்கு சிறப்பு உணவாக வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படும். மேலும், சைவ உணவு வேண்டும் என்றால் சாதத்தோடு நெய், வாழைப்பழம் வழங்கப்படும். இதில் ஒன்றை கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

 

Tags :

Share via

More stories

Logo