கூட்டணி அமைப்பதற்காக நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க மாட்டோம் 

by Editor / 18-07-2023 10:15:15pm
கூட்டணி அமைப்பதற்காக நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க மாட்டோம் 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் பாஜகவுக்கு எதிராக ஒரு பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள் தனிப்பட்ட பதவிகளுக்கு (பிரதமர் )காங்கிரஸ் கட்சியில் ஆசைப்படவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை நாடாளுமன்ற தேர்தலில்  கூட்டணி என்பது சில மாநிலங்களில் எளிதில் அமைந்து விடாது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எளிதில் அமைந்து விட்டது சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதான மாநில கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் அப்படி நேரடி போட்டி இருக்கும் பட்சத்தில் விட்டுக் கொடுத்தால் மட்டுமே கூட்டணி அமையும் கூட்டணி என்று வரும்போது இரண்டு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் விட்டுக் கொடுத்தால் மட்டுமே கூட்டணி அமையும் இதை முழுமையாக காங்கிரஸ் கட்சி உணர்ந்து இருக்கிறது. அமலாக்கத்துறை என்ற அமைப்பே இந்தியாவிற்கு தேவை கிடையாது அமலாக்கத்துறை என்பது அந்நிய செலாவணி, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், ஆயுத கடத்தல் அதை மட்டுமே விசாரிக்கவும் அதில் நடக்கும் பண பரிவர்த்தனையை விசாரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. ஆனால் அதை இந்த அரசாங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ள அரசியல் கட்சியினரை. மன உளைச்சலுக்கு ஆளாகி சட்ட சிக்கலுக்குள் அவர்கள் மாட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது வழக்கு தொடர்கிறார்கள் இது எதிர்பார்த்த ஒன்று தான் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தலைமை தாங்கும் திமுக பாஜகவுக்கு எல்லா தருணத்திலும் எதிர்ப்பாக இருக்கும் அரசியல் கட்சி என்பதால் அந்தக் கட்சியில் இருக்கும் முக்கிய பிரமுகர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்பதற்காக தான் இது அரசியல் காரணத்திற்காக செய்யப்படும் செயல்  அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டியது பணப்பரிவர்த்தனை மட்டும்தான் இதற்கு சோதனையோ, கைது என்பது தேவையில்லாத ஒன்று  350 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்பது நயினார் நாகேந்திரனின் ஆசை. எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும் ஆனால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கூட்டம் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் முன்மொழி வேண்டும் நிச்சயமாக ஒரு கூட்டம் சென்னையில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்.  கூட்டணி அமைப்பதற்காக நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க மாட்டோம் மேகதாதுவை பற்றி பேச காவிரி மேம்பாட்டு ஆணையம் இருக்கிறது நீதிமன்றம் இருக்கிறது. 26 கட்சிகள் ஒன்றிணைந்தது கூட்டணிக்கான கூட்டம் மேகதாது பிரச்சனை இருப்பதால் இரண்டு மாநில முதல்வரும் சந்தித்துக் கொள்ளாமல் இருக்க கூடாது சொல்வது அபத்தமாக உள்ளது என தெரிவித்தார்.

 

Tags :

Share via