பீகார் மாநில சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது
பீகார் மாநில சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலிருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மதியம் 3 மணியளவில் 53.77 விழுக்காடு வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தெரிய வருகிறது. முழுமையான வாக்குப்பதிவு நிலவரங்கள் இரவு 7 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும். மாநிலத்தில் எந்த பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் வாக்குவாதங்களில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றியதை தவிர வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. 121 தொகுதிகளில் 1314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர்,இரண்டாம் கட்ட தேர்தல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
Tags :



















