ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

by Admin / 24-02-2022 11:36:30am
 ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

உக்ரைன் ரஷியா இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார்.
 
இதையடுத்து உக்ரைன் மீது உடனடியாக தாக்குதல் தொடங்கியது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் தொடங்கியது.

ஒட்டேசா நகர் மீதும் குண்டு மழை பொழியும் சத்தம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தடையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தாக்குதலால் ஏற்படும் அழிவுக்கும் உயிரிழப்புகளுக்கும் ரஷியாவே காரணம் என்றும் ஜோ பைடன் கூறி உள்ளார்.
 

 

Tags :

Share via

More stories