விஜய் பரப்புரை நிகழ்வின் பொழுது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு- மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ விசாரணை நடத்த உத்தர

கரூரில் ஜூலை 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை நிகழ்வின் பொழுது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் பற்றிய உண்மை நிலையை கண்டறிய ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. தமிழக அரசாலும் சென்னை உயர்நீதி மன்றத் தாலும் நியமிக்கப்பட்டுள்ள ஆணை யத்தின் மீதும் சிறப்பு புலனாய்வு விசாரணையின் மீதும் நம்பிக்கை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தது.. தமிழக அரசு- தமிழக வெற்றிக்கழகத்திற்கிடையேயான வழக்கு விசாரணைநடந்தது. . வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது.. உச்ச நீதிமன்றம், தேசிய மனசாட்சியை உலுக்கிய ஒரு சம்பவமாக இதை கூறியதோடு மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ விசாரணை நடத்த , நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு ..சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு,..முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஷ் தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது.
நீதிபதி அஜய் ரஷ் தோகி தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிராத காவல்துறை கண்காணிப்பாளர் பதவியில் உள்ள இரண்டு மூத்த இந்திய காவல் பணி அதிகாரிகளை இக்குழுவில் பணியாற்ற பரிந்துரைக்க கேட்டுக் கொண்டுள்ளார்..
Tags :