பா.ஜ.க. ஓ..பி.சி. அணிச்செயலாளர் சக்திவேல் வண்டியூர் டோல்கேட் அருகே கொலை.

by Editor / 15-02-2024 10:02:14am
 பா.ஜ.க. ஓ..பி.சி. அணிச்செயலாளர் சக்திவேல் வண்டியூர் டோல்கேட் அருகே  கொலை.

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். பா.ஜ.க மாவட்ட ஓ.பி.சி அணிச் செயலாளராக பதவி வகித்து வந்த சக்திவேலுக்கு சிலருடன் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை சாலையிலேயே வைத்து வெட்டி, படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags : பாஜக ஓபிசி அணிச்செயலாளர் சக்திவேல் என்பவர் வண்டியூர் டோல்கேட் அருகே கொலை

Share via

More stories