2028 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய பெட்ரோல் இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை

by Admin / 12-04-2026 08:25:15am
 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய பெட்ரோல் இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்க 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய பெட்ரோல் இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை விதிக்க டெல்லி அரசு முன்மொழிந்து உள்ளது. டெல்லி அரசின் புதிய மின்சார வாகனக் கொள்கை 2026 2030 வரைவு அறிக்கையில் இந்த திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது .2028 ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் மற்றும் சி. என். ஜி மூலம் இயங்கும் புதிய இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட மாட்டாது என்றும் அந்த தேதிக்குப் பிறகு டெல்லியில் மின்சார இரு சக்கர வாகனங்கள் மட்டுமே புதிய பதிவுக்கு அனுமதிக்கப்படும் என்றும் இதே போல் 2027 ஜனவரி 1 முதல் புதிய மின்சார ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த வரைவு அறிக்கை தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்து பெறப்பட்டு 30 நாட்களுக்குப் பிறகு இது இறுதி செய்யப்படும்.

 

Tags :

Share via
Logo