நெல்லை பள்ளி கட்டிடவிபத்தில் மாணவர்கள் பலி -தலைவர்கள் இரங்கல்.
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்த மாணவர்கள் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் உரிய முறையில் செயல்படுகிறதா என்பதனை பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.- எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை விபத்துபோல் துயரங்கள் நிகழாதவாறு நடவடிக்கை தேவை-- சரத்குமார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் எந்த தவறும் செய்யாத பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் தற்போது பறிபோய் உள்ளது.- - தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த்
நெல்லை டவுண் சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மூன்று இளம் மாணவர்கள் பலியானதோடு மேலும் சில மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.--- கே. பாலகிருஷ்ணன்-மாநில செயலாளர்.
Tags :