திருப்பூரில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 42 வீடுகள் தரைமட்டம்
திருப்பூரில் எம்ஜிஆர் நகர் பகுதியில் 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததையடுத்து, தொடர்ச்சியாக அருகில் இருந்த 3 வீடுகளில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் அனைத்து வீடுகளும் தரைமட்டம் ஆனதால் அங்கு தங்கியிருந்த மக்களுக்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
Tags :



















