இரவு நேரங்களில் வீட்டு வாசலில் நிற்கும் பைக்குகளை திருடும் கும்பல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

by Editor / 30-05-2023 09:45:26pm
இரவு நேரங்களில் வீட்டு வாசலில் நிற்கும் பைக்குகளை திருடும் கும்பல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்கமாள் கோவில் அருகே உள்ள அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் கனிராஜ். இவர் அரசு போக்குவரத்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். கனிராஜ் வழக்கமாக தனது பைக்கினை வீட்டின் முன்ப நிறுத்துவது வழக்கம்.இதே போன்று நேற்று முன்தினம் இரவில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் காலையில் பார்க்கும் போது பைக்கினை காணவில்லை. இதே போன்று தனுஷ்கோடியாபுரம் தெருவினை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரும் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கினை நேற்று காலையில் பார்க்கும் போது திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கனிராஜ், மனோஜ்குமார் இருவரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் இருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இரு பைக்குகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் திருடப்பட்ட இரு பைக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கோவில்பட்டி நகரில் வீடுகளில் திருட்டு, கோவில் உண்டியல் திருட்டு, ஸ்டூடியோ, செல்போன் கடையில் திருட்டு என திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்பொழுது அந்த திருட்டு கும்பல் பைக்குகளை திருடி வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை திருட்டுசம்பவங்களில் குற்றவாளிகள் யாரூம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories