12 ஆயிரம் அரசு பள்ளி பாட புத்தகங்கள் மாயம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலக மைய அலுவலகத்தில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையி லான சுமார் 12 ஆயிரம் பாட புத்தகங்கள் மாயமானது. இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அங்கு பணியில் இருந்த உதவியாளர் தங்கவேல், கிளர்க் திருநாவுக்கரசு ஆகியோரை பணி இடைநீக்கம் செய்தார். பாட புத்தகங்கள் மாயமானது தொடர்பாக ஊத்தங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் அலுவலகத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பணியாளர்கள் உள்பட 8 பேர் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.12 ஆயிரம் அரசு பள்ளி பாட புத்தகங்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : 12 thousand government school textbooks magic.