தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்து ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :