திமுகவில் இணைந்த விஜிலா சத்யானந்த் - நெல்லை அதிமுகவினர்  அதிர்ச்சி 

by Editor / 08-07-2021 08:19:48pm
 திமுகவில் இணைந்த விஜிலா சத்யானந்த் - நெல்லை அதிமுகவினர்  அதிர்ச்சி 

 

நெல்லையில் அதிமுகவின் முக்கிய உறுப்பினராக பார்க்கப்பட்ட விஜிலா சத்யானந்த் திமுகவில் இன்று இணைந்தார். விஜிலா தென் மாவட்டங்களில் இவர் முக்கியமான அதிமுக தலைவராக பார்க்கப்பட்டவர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர். முன்னாள் அதிமுக நெல்லை மேயர், ராஜ்ய சபா எம்பி. அதிமுகவில் இப்படி பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் தற்போது திடீரென திமுகவில் இணைந்து இருக்கிறார். இவர் கட்சி மாறியதும் கூட சைலண்ட்டாகவே நடந்துள்ளது. சர்ப்ரைஸ் ஒரே நாளில் மநீம, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் முக்கியான 2 பெண் நிர்வாகிகளை திமுக தங்கள் கட்சியில் இணைந்து இருக்கிறது. ஒரே நாளில் பேரும் திமுகவில் இணைந்து கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் விஜிலா சத்யானந்த் திமுகவிற்கு சென்றது அதிமுகவின் தென் மண்டல உறுப்பினர்கள் கிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via