கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

by Admin / 22-09-2023 11:17:51pm
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடிவிற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ.நா.பூங்கொடி, அவர்கள் துவக்கி வைத்தாரதிண்டுக்கல் விற்பனை நிலையத்தில் நடப்பு ஆண்டு விற்பனை குறியீடு ரூ.85.00 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ நாபூங்கொடி,  அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் முதல் விற்பனையை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்ததாவது:-

கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ- ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும், பண்டிகை காலங்களில் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் ஆர்கானிக் புடவை இரகங்கள். காஞ்சிபுரம் பட்டு. சேலம் பட்டு, திருப்புவனம் பட்டு. கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள், கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன். கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்/பருத்தி (Linan/Cotton) சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.com என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.44.68 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டு 2023 விற்பனை குறியீடாக ரூ.85.00 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ஆர்.மோகன்குமார், உதவி மேலாளர் மு.சங்கீதா, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags :

Share via