பயங்காரவாதிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது... சீன வெளியுறவுத்துறை அமைச்சர் - வாங் யி

by Admin / 21-08-2021 02:49:28pm
பயங்காரவாதிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது... சீன வெளியுறவுத்துறை அமைச்சர் - வாங் யி

ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறக் கூடாது என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

 ஆப்கானிஸ்தானை தானிபான்கள் கைப்பற்றியுள்ளதற்கு சீனாவும் பாகிஸ்தானும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆப்கன் அரசாக தாலிபான்களை ஏற்க முடியாது என இந்தியா  உள்ளிட்ட 12 நாடுகள் அறிவித்துள்ள நிலையில் சீனாவும் பாகிஸ்தானும் தாலிபான்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

காபூலில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டு அதிகாரிகள் காபூலை விட்டு வெளியேறி வரும் நிலையில் சீன தூதரகம் மட்டும் எந்த வித சலனமும் இன்றி செயல்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர், பயங்கரவாதத்தை விடுத்து, அனைத்து கட்சிகள் மற்றும் இனக்குழுக்களை உள்ளடக்கிய ஒன்றினைந்த இஸ்லாமிய அரசை தாலிபான்கள் அமைக்க வேண்டும் என கூறினார். மேலும் ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற கூடாது எனவும் வலியுறுத்தினார்.

 

Tags :

Share via