உலகம் இப்போது இந்திய மூளைத் திறனை மட்டுமல்ல; அறிவுத்திறனையும் நம்புகிறது- பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி-போலந்து பிரதமர் டொனால்ட் டஸ் இருவரும் பாதுகாப்பு, விண்வெளி , அணுசக்தி துறைகளில், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க உறுதியளித்துள்ளனர்.
பிரதமர் மோடி,புது தில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில்,உலகம் இப்போது இந்திய மூளைத் திறனை மட்டுமல்ல; அறிவுத்திறனையும் நம்புகிறது என்றும் இது உலகளாவிய புத்தாக்கத்திற்கான மையமாக இந்தியா மாறி வருவதைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சவூதி அரேபிய விமான நிலையம் மற்றும் எண்ணெய் வயலைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. தம்மாம் விமான நிலையத் தாக்குதலில் ஒர் இந்தியர் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் புதிய தீர்மானம் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்க பரிசீலிக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
சிஜேபி அமைப்பின் தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா , முதற்கட்ட காவல்துறை சம்மனைத் தவறவிட்டதால், டெல்லி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர் .
டெல்லி மாநகராட்சிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் கோப்புகளை வீசியெறிந்தும், ஒலிவாங்கிகளை உடைத்தும் நடத்தியதால் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. வார்டு வளர்ச்சி நிதி தொடர்பாகத் தொடங்கி, பின்னர் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்த காரசாரமான விவாதமாக மாறியது .
பெரும் பாதுகாப்பு குறைபாடுகளைத் தொடர்ந்து, இந்திய அரசு அவசர டிஜிட்டல் தணிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. உலகளாவிய இணைய உலாவிகள் இந்திய டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான இமுத்ராவை முடக்கியுள்ளன.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டும் 0.5% க்கும் மேல் சரிந்து நிறைவடைந்ததால், இந்தியப் பங்குச் சந்தை அழுத்தத்தைச் சந்தித்தது . உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் மின்சாரம், உலோகப் பங்குகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகள் சரிவுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 3.2 பில்லியன் டாலர் திரட்டும் நோக்கில் மிகப்பெரிய பங்கு விற்பனையைத் தொடங்கியுள்ளது.
Tags :

















