பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல்.. பிரதமருக்கு மாணவிகள் கடிதம்

ஹரியானாவில் உள்ள சிர்சாவைச் சேர்ந்த 500 மாணவிகள், பேராசிரியரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மற்றும் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சவுத்ரி தேவிலால் பல்கலைக்கழக பேராசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேராசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Tags :