பென்னாகரத்தில் முனியப்பன் கோயில் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

பென்னாகரம் அருகே மடம் - காவிரி சாலை பகுதியில் அமைந்துள்ளது பெலாமலை முனியப்பன் கோயில். இந்த கோயிலுக்கு பென்னாகரம் மற்றும் மடம், கூத்தபாடி, காவேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் பெலாமலை முனியப்பன் சிலைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை முனியப்பன் கோயிலுக்கு பூஜை செய்ய வந்த பக்தர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெலாமலை முனியப்பன் கோயில் பகுதியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக இருள் சூழ்ந்துள்ளதால் இரவு, பகல் பாராமல் மது அருந்தும் இடமாக மாறி வருவதாகவும், மது அருந்துவிட்டு இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பெலாமலை முனியப்பன் கோவில் சிலைக்கு தீ வைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோயில் பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :