நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை.. கல்வி இயக்குநர் திட்டம்

by Editor / 04-07-2025 11:58:32am
நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை.. கல்வி இயக்குநர் திட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறியவர் நிகிதா. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கல்லூரி கல்வி இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நிகிதா தாவரவியல் துறை தலைவராக இருந்தார். இவர் மீது, மாணவிகளை தகாத முறையில் பேசியது உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via