அஜித்குமார் கொலை பொதுமக்கள் சாட்சி அளிக்கலாம் விசாரணை நீதிபதி அழைப்பு..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் சித்திரவதை வழக்கு விசாரணை, மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் மூன்றாவது நாளாக நடைபெற்றது.
இந்த நிலையில், வழக்கு விசாரணையின் நடுநிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், முக்கிய அறிவிப்பை நீதிபதி வெளியிட்டுள்ளார். அதன்படி, அஜித் குமார் பணிக்கு வந்த நாள் முதல், அவரது உடல் மருத்துவமனையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் வரை, அவரை நேரில் பார்த்த பொதுமக்கள், சக ஊழியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் சாட்சியளிக்க விரும்பும் எவரும், திருப்புவனம் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் வந்து தங்களது விளக்கங்களை தன்னிடம் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய சாட்சி ஏற்றுக்கொள்ளும் படியான பட்சத்தில் இருக்கும் பொழுது அவர்களை சாட்சியாக ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
Tags : The investigating judge has called for the public to testify in the Ajith Kumar murder case.