இலவச ரேஷன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தாது: பிரியங்கா காந்தி
5 கிலோ இலவச ரேஷன் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்படாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய பிரியங்கா, வேலை வாய்ப்பு கிடைத்தால் தான் உங்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இலவச ரேஷன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தாது. ஒரே ஒரு நபரை சார்ந்து கொள்கைகளை உருவாக்கும் அரசியல் கட்சியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
Tags :