சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தோடு அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனங்கள்

by Editor / 20-11-2023 09:05:14am
 சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தோடு அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனங்கள்

சிவகாசியை சார்ந்த பத்து இளைஞர்கள் தனியார் நிறுவனத்தில் இருசக்கர வாகன விளம்பரத்திற்காக 10 ktm இருசக்கர வாகனத்தில் சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தோடு அதிவேகத்தில் வந்த பொழுது அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பதிவிடப்படாமல் இருந்தது தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின்உடைய உத்தரவின் பேரில் தென்காசி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மணி குத்துக்கல்வலசை பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். சோதனையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அதனுடன் பாதுகாப்புக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் கேடிஎம் கம்பெனி உடைய விற்பனை நிலையம் மூலம் அதனுடைய மேலாளர் பாலகோபாலன் தலைமையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த சிவா, ராஜபாண்டி, மதன்குமார், சண்முக பாண்டி, பூமி, அருண்குமார், சரண்குமார், விக்னேஷ் குமார்,கௌதம், உள்ளிட்ட 10 நபர்கள் சிவகாசி முதல் குற்றாலம் வரை இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக கம்பெனியினுடைய விளம்பரத்திற்காக மோட்டார் சைக்கிள் இயக்கி வந்தது தெரிய வந்தது.மேலும் இவர்கள் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக சிவகாசி சார்ந்த பிரபலமான ஆம்புலன்ஸ் நிறுவனமான ஆர்த்தி என்கின்ற ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் உடைய ஆம்புலன்ஸ் வாகனமும் வாடகைக்கு அமர்த்தப்பட்டு இந்த பேரணியோடு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த வாகனங்களை காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் உயிரோடு விளையாடும் நிலையை வாலிபர்களும் மாணவர்களும் தான் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்ற நிலை மாறி தற்போது இருசக்கர வாகனத்தின் உடைய விற்பனையகங்கள் மூலமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

Tags : சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தோடு அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனங்கள்

Share via