சங்கரன்கோவிலில் ஒரே அரசு உணவத்திற்கு இரண்டுமுறை திறப்புவிழா. 

by Editor / 10-05-2025 11:03:01am
சங்கரன்கோவிலில் ஒரே அரசு உணவத்திற்கு இரண்டுமுறை திறப்புவிழா. 

சங்கரன்கோவில் திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சிறுதானிய உணவகம் வெள்ளிக்கிழமை அரசு அதிகாரிகள்  திறந்து வைத்த நிலையில் இன்று அந்த சிறுதானிய உணவகத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்  முன்னிலையில் இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ ஒரே கடையை இரண்டு முறை ரிப்பன் வெட்டி திறந்தாலும் ஏழை மக்களுக்கு சிறுதானியங்கள் தரமாக கிடைத்தால் போதும் என்று மக்கள் பேசிச்சென்றவண்ணம் உள்ளனர்.

 

Tags : சங்கரன்கோவிலில் ஒரே அரசு உணவத்திற்கு இரண்டுமுறை திறப்புவிழா. 

Share via