அரசு வழக்கறிஞர் மற்றும் அவரது மகளை கொலை செய்ய முயற்சித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

by Editor / 20-10-2022 09:52:50pm
அரசு வழக்கறிஞர் மற்றும் அவரது மகளை கொலை செய்ய முயற்சித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு. இவரது மகள் நிஷா. இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் பயின்றபோது, திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த ரகுமான்கான்(26) என்பவர் நிஷாவை காதலித்து வந்துள்ளார். மேலும் நிஷாவிடம் தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக ஜமீலாபானு சேலத்தில் அளித்த புகாரின் பேரில் சேலம் போலீசார் ரகுமான் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்த அப்துல்ரகுமான், கடந்த மாதம் 18ம் தேதி திருப்பூர் குமரன் சாலையிலுள்ள ஜமிலாபானு அலுவலகத்திற்கு சென்று ஜமீலா பானு, அவரது மகள் நிஷா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். வெட்டுப்பட்ட இருவரும் சத்தமிடவே, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வெட்டுப்பட்ட இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராகுமான்கானை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் செப்டம்பர் 20ம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், ராகுமான்கான் மீது சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் இருப்பதும், மேலும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கிற்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதால் ராகுமான்கனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via