சைக்கிளில் சென்றவரை கார் ஏற்றி கொலை
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் ராமன். இவர் லண்டனில் தென்னிந்திய உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றினார். இந்த உணவகம் அங்குள்ள இந்தியர்கள் மத்தியல் பெரும் பிரபலமானது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி தனது பணியை முடித்துவிட்டு விக்னேஷ், சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.இது திட்டமிட்ட கொலையாக இருக்கும் என்ற கோணத்தில் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :



















