100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படாது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், 100 நாள் வேலைதிட்டம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மக்களவையில் சேலம் தொகுதி எம்.பி. செல்வகணபதி இத்திட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பினார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், 100 நாள் வேலை திட்டத்திற்கு 2024 - 25 மற்றும் 2025 - 26 நிதியாண்டுகளில் தலா ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும் கூறினார்.
Tags :