முடிவை வரவேற்போம் !

by Editor / 05-06-2021 09:16:08pm
முடிவை வரவேற்போம் !

 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கடந்த 3 நாட்களாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெற்றுவந்ததுஇது குறித்து பல விமர்சனங்கள்  ஏற்பட்ட நிலையில் வேறு வழி இல்லாமல்  இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது  என்று எடுத்துக் கொள்ளலாம். சி பி எஸ் இ  தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்ட நிலையில் இது தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே தமிழகத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றே கூறலாம். காரணம். பாஜக உள்ளிட்ட கட்சிகள் எந் த வழியில் திமுக அரசை குறை கூறலாம் என காத்து இருக்கும் நிலையில்

அதை நன்கறிந்த முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த முடிவு காரணமாக

.தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாமல், பிளஸ் 2 தேர்வு மட்டும் ரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளை விக்கப் போவதில்லை. உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்களை ஏற் படுத்தும் என்ற கருத்தும்  நிலவுகிறது.

தமிழகஅரசு, மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படாமல், நோய்த் தொற்று கட்டுப் பாட்டிற்கு வந்தபிறகு எழுத்துப் பூர்வமான பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒருமாத முன் அறிவிப்போடு நடத்த வேண்டும் .மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்வு எழுத வாய்ப்புகளை உருவாக்கலாம் . ஆசிரியர்களும் இருக்கும் பகுதியிலேயே தேர்வுப் பணிகளை மேற் கொள்ளலாம் . தமிழ்நாடு அரசு உருவாக் கியுள்ள வலுவான பள்ளிக் கல்விக் கட்ட மைப்பை சரியாகப் பயன்படுத்தி பாதுகாப்பாக தேர்வை நடத்த இயலும் .மாணவர்கள் குழப்பம் அடையாமல் தங்களின் பயிற்சிகளைத் தொடரும் வகையில் , தேதியைப் பின்னர் அறிவித்தாலும் , தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை  அரசு  வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

பொதுவாக எதிர்கால கல்வியை பொறுத்தே பிளஸ் 2 தேர்வு ரத்து இருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக அமைந்த நிலையில் நீட் மட்டுமே இந்த பிரச்னைக்கு பிரதான காரணம். எனவே, மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வரவேற்கும் முடிவு என்றாலும் மதிப்பெண் பிரச்னை எப்படி சமாளிக்கப்டும் என்பது பெரு ம் தலைவலி, பாஜக எப்படியும் நீட் கொண்டுவர மிக முக்கியம் காட்டிவருகிறது. எனவே, தமிழகத்தில் இனி நீட் குறித்து தனி குழு ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்ட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளிக்கிறது அரசு. இந்த சூழலில் சி.பி.எஸ்.., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி, டில்லியைச் சேர்ந்த மம்தா சர்மா என்ற பெண் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்இந்த வழக்கு, நீதிபதிகள் .எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அமர்வு முன்  விசாரணைக்கு வந்தபோது: தேர்வுகளை ரத்து செய்யும் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் உயர் கல்விகளில் சேர வேண்டியுள்ளது. அதனால் இந்த மாணவர்களுக்கு, எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது என்பதையும், அதற்கான வழிமுறைகளையும் இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.என  அமர்வு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது  எப்படி இருந்தாலும் இம்முறை மாநில அரசு தேர்வை  போட்டி தேர்வுகள் போல நடத்தி மாணவர்கள் மதிப்பெண் பெற வழி செய்யலாம்.நீட் தேர்வை நிச்சயமாக தமிழக அரசு நடத்த முன்வராது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் எனலாம்.

 

 

Tags :

Share via