சேலத்தில் தெரு நாய்களை கொன்று ஏரியில் வீசப்பட்டதால் பரபரப்பு

சேலம் ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது 10 தெருநாய்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் உணவு வழங்கி வந்ததும், கடந்த 2-ந்தேதி முதல் தெரு நாய்கள் காணாமல்போனதும் தெரிந்தது. விஷம் வைத்தது யார்? இதுகுறித்து போலீசார் கூறும் போது, தெரு நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்தோ அல்லது அடித்தோ கொன்று ஏரியில் வீசி உள்ளனர். எனவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினர்.
Tags :