மளிகைக் கடை உரிமையாளரை தாக்கிய பாமகவினர்

சென்னையில் மளிகைக் கடை உரிமையாளர் மீது பாமக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இரட்டை அர்த்தத்தில் பேசியதாக மனைவி கூறிய நிலையில், மளிகைக்கடை உரிமையாளர் சபரிநாதனை பாமக நிர்வாகி சத்யராஜ் மற்றும் அவரது நண்பரும் பாமக நிர்வாகியுமான சண்முகவேலும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கடை உரிமையாளர் சபரிநாதன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :