தொடரும் பாலியல் குற்றங்கள்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை குறையவில்லை என்றும் கூறுகின்றனர். மேலும், 10 சதவீத பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மட்டுமே வெளி உலகத்திற்கு தெரிய வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
Tags :