மாற்று சமூக இளைஞரை காதலித்த மகளை கொன்ற தந்தை

by Staff / 17-08-2024 02:48:08pm
மாற்று சமூக இளைஞரை காதலித்த மகளை கொன்ற தந்தை

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா (வயது 19). இதனிடையே, சஞ்சனா அதேபகுதியை சேர்ந்த மாற்று சமூக இளைஞரான நரேந்திர ஜதேவை காதலித்துள்ளார். இந்த காதலை கைவிடுமாறு சஞ்சனாவின் தந்தை பிரஜாபதி மற்றும் உறவினர்கள் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடந்த வாக்குவாதத்தில் தனது மகளின் கழுத்தை நெரித்து பிரஜாபதி கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via