4 வயது குழந்தையை கொன்று காட்டில் புதைத்த தாய்

ஒடிசா மாநிலம் கோந்தமால் மாவட்டம் சாரங்காகர் காவல் நிலையத்தில் நான்கு வயது மகளை தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதிங்கியா கிராமத்தைச் சேர்ந்த பத்மினி ராகேஷ் டாண்டியா என்ற வாலிபரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை சுரேகா (4 வயது). சில ஆண்டுகளுக்கு முன், பத்மினி கணவரை பிரிந்து, மகளுடன் வசித்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக பத்மினி தன் மகள் சுரேகாவை கொலை செய்து காட்டில் புதைத்துள்ளார். இதை பத்மினி தனது தந்தை பிபினிடம் கூறியபோது உண்மை வெளிவந்தது.
Tags :