பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டாஸ்

by Editor / 19-04-2025 03:08:32pm
பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டாஸ்

பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவதி உத்தரவின் பேரில் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்ட கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி மகன் செந்தில் மள்ளர் (47) என்பவரை இன்று கழுகுமலை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo