நடிகர் அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிற்கு அடையாளம் தெரியாத நபரால் தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்திற்கு மின்னஞ்சல்மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது... இதனுடன் நடிகர் அஜித்தின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்க வீட்டிற்கும் மயிலாப்பூரில் உள்ள நடிகர் எஸ்.வி .சேகரின் வீட்டிற்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. தகவல் கிடைத்தவுடன், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. .சோதனையின் முடிவில், இந்த மிரட்டல் ஒரு புரளி (hoax) எனத் தெரியவந்துள்ளது..சமீப காலங்களில் அரசியல், திரைப்பட முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாகி உள்ளது..
Tags :


















