சாலை விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பலி

by Editor / 08-07-2025 12:53:25pm
சாலை விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பலி

சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்ற நான்கு பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கும்பகோணத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் - தஞ்சை புறவழிச்சலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே ஒருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மூவரும் உயிரிழந்தனர். போலீஸ் விசாரிக்கிறது.

 

Tags :

Share via