2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் பிரதமர் திடீர் முடிவு
கொரோனா பெருந்தொற்றால் இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ்டிரஸ் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.இங்கிலாந்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதன்படி. அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரமதர் முடிவெடுக்கவுள்ளார் என்றும் தெரிகிறது.
Tags :